Search
Friday 19 October 2018
  • :
  • :

விலகினாரா யுவன்?

அஜித் என்றால் உடனே நினைவுக்கு வருவது யுவன் ஷன்கர் ராஜாவின் பீஜிஎம் தான். தீனா, பில்லா, மங்காத்தா என யுவன் போட்ட பீஜிஎம்கள் இன்றும் தமிழ் சினிமாவின் மாஸ் பீஜிஎம்கள்.
கடைசி சில அஜித் படங்களுக்கு யுவன் இசையமைக்காததால் அவரது ரசிகர்கள் வருத்ததில் இருந்தனர். ஆனால் அஜித் தற்போது அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விஸ்வாசம் படத்திற்கு
யுவன் இசையமைப்பார் என்று சொல்லப்பட்டிருந்தது. அதனால் யுவன் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்தனர்.

இப்போது அந்த படத்திலிருந்து யுவன் விலகியிருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது. சரியான காரணங்கள் ஏதும் தெரிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் “விஸ்வாசம்”
படத்திற்கு மீண்டும் அனிருத் அல்லது “விக்ரம் வேதா” புகழ் சாம் சி.எஸ் இருவரில் யாராவது ஒருவர் இசையமைக்கலாம் என்று தெரிகிறது. அனேகமாக, சாம் சி.எஸ் பெயர்
உறுதி செய்யப் படலாம் என தெரிகிறது.

நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் இந்தப் படத்தை “விவேகம்” படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.
ஜனவரி இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் கதாநாயகி தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.