Search
Wednesday 20 February 2019
  • :
  • :

’நடிப்பு தூள் கிளப்பிட்டீங்க’… விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் ‘ராட்சசன்’. சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த அநேக மக்களால் வரவேற்கப்பட்டு நல்ல பாராட்டினை பெற்றது.

சில தினங்களுக்கு முன் இப்படத்தினை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாயகன் விஷ்ணு விஷாலை போனில் அழைத்து, ‘ பெண்டஸ்டிக், பெண்டஸ்டிக், பெண்டஸ்டிக், நடிப்பு தூள் கிளப்பிட்டீங்க, போலீஸ் யூனிபார்ம்ல செம பிட்-ஆ இருக்கீங்க, வில்லன் பாடி-பங்குவேஜ் சூப்பர், இயக்குனர் மற்றும் உங்களோடு கூட்டணி சூப்பர்.’ என்று பாராட்டியுள்ளார்.

இதனால் படக்குழுவினர் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.