Search
Thursday 19 October 2017
  • :
  • :

தீபாவளிக்கு விக்ரமின் குட்டி ஸ்கெட்ச்

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா இணைந்து நடித்திருக்கும் படம் `ஸ்கெட்ச்’. வடசென்னையைப் பின்னணியாகக் கொண்டு ஆக்‌ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இது விக்ரமின் 53-வது படமாகும்.

இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்திருக்கிறார்.

அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் தீபாவளி தினமான அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இது விக்ரம் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.