Search
Thursday 19 October 2017
  • :
  • :

விக்ரமுடன் மோதும் சிவகார்த்திகேயன்!

நடிகர் “சீயான்” விக்ரமுடன் தமன்னா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள “ஸ்கெட்ச்” திரைப்படத்தின் டீசரை தீபாவளிக்கு வெளியாகுமென்று அறிவித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைக்க, ”வாலு” படத்தை இயக்கிய விஜய் சந்தர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

”ஸ்கெட்ச்” படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை நவம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தை டிசம்பர் மாதத்தில் கிருஸ்துமஸ் விருந்தாக திரைக்குக் கொண்டு வர வேகமாக உழைத்து வருகிறது படக்குழு.

கிறிஸ்துமஸ் திங்கட்கிழமை 25ஆம் தேதி வருகிறது. எனவே அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான 22ஆம் தேதி வெளியிட வாய்ப்புகள் உள்ளதாம். இதே நாளில் தான் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படமும் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.