Search
Saturday 20 January 2018
  • :
  • :

`ஸ்கெட்ச்’ போட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விக்ரம்

விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் `ஸ்கெட்ச்’. வடசென்னை பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். மேலும் மற்றொரு நாயகியாக நடிக்க ஸ்ரீபிரியங்கா ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

தமன் இசையமைத்து வரும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ தகவல், விக்ரம் பிறந்தநாளான வருகிற 17-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இசையமைப்பாளர் தமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விக்ரம் பிறந்தநாளன்று அவரது படம் குறித்த புதிய தகவல் வெளியானால், அது விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அன்றைய தினத்தில் ‘ஸ்கெட்ச்’ படத்தின் சிங்கிள் டிராக்கோ அல்லது டீசரோ வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் பிறந்தநாளுக்கு இன்னும் இரண்டு தினங்கள் இருக்கும் நிலையில், படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்திலேயே நேற்று நள்ளிரவு கேக் வெட்டி கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.





Warning: Invalid argument supplied for foreach() in /home/cinemaparvai78/public_html/cinemapaarvai/wp-content/plugins/popliup/public/class-popliup-public.php on line 299