Search
Monday 25 September 2017
  • :
  • :

புரியாத புதிருக்கு விடிவு காலம் வந்தாச்சு

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விக்ரம் வேதா’ படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதியுடன் மாதவன், கதிர், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். புஷ்கர் காயத்ரி இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘புரியாத புதிர்’ திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. பல நாட்கள் ரிலீஸ் தேதி அறிவித்தும் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்ரேசன் நிறுவனத்தின் உரிமையாளர் ஜே.எஸ்.கே. இப்படத்தை செப்டம்பர் 1ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.