Search
Saturday 21 October 2017
  • :
  • :

விதவிதமான லொக்கேஷன்களில் விஜய் சேதுபதி – திரிஷா

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்திசண்டை’ போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தற்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் காளிவெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
கோவிந்த் மேனன் இசையமைத்து வரும் இப்படத்தை பிரேம்குமார் இயக்கி வருகிறார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்திற்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் உள்ள ஸ்பிட்டிவேலி என்ற இடத்தில் விஜய்சேதுபதி சம்மந்தப்பட்ட பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. ராஜஸ்தான், கல்கத்தா போன்ற இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் துவங்க உள்ளது. அதில் விஜய்சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

இதுவரை விஜய் சேதுதுபதி நடித்து வெளிவந்த படங்களின் படப்பிடிப்பு இவ்வளவு வேறுபட்ட இடங்களில் நடைபெற்றது இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த படத்தில் அவ்வளவு லொக்கேஷன்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு டிராவலிங் சம்மந்தப்பட்ட கதை என்பதால் இவ்வளவு லொகேஷன்கள் தேவைப்படுகிறது என்றார் இயக்குனர் பிரேம்குமார்.