Search
Monday 18 June 2018
  • :
  • :

வித்தியாசமான தோற்றத்தில் எடக்கு பண்ணும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கருப்பன்’. இப்படத்தைத் தொடர்ந்து இவர் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘96’, ‘ஜுங்கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இத்துடன் நிமோ ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.பாலு தயாரிக்கும் ‘எடக்கு’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

எஸ்.சிவன் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில், யாரும் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார்.

இப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் பேசிய போது, “விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும். மேலும் இப்படத்தின் திரைக்கதையும் மிக சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது. ஏனெனில் இது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்ட படம். இப்படத்தில் விறுவிறு சண்டைக் காட்சிகளை தவசிராஜ் கடினமாக உழைத்து வடிவமைத்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச் சுற்றிய ஊர்களிலும் நடந்துள்ளது.

மிக விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது “எடக்கு”.