Search
Friday 22 June 2018
  • :
  • :

இன்றைய பரபரப்புச் செய்திகள் 27/09/17 !

* தமிழக அரசு சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்கள் பங்கேற்க அழைத்து வருவதற்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு.

* சசிகலா, டிடிவி தினகரன் எங்களுடன் விரைவில் இணைவர். ஜெயலலிதா மரணம் தொடர்பான அமைச்சர்கள் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஜெயலலிதாவைப் பார்த்தேனா, இல்லையா என்பதை விசாரணை ஆணையத்திடம் தெரிவிப்பேன் – டெல்லியில் தம்பிதுரை பேட்டி.

* காவிரி விவகாரம் உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார் – தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் விளக்கம்.

* ஜெயலலிதா உடலில் இருந்து எக்மோ கருவி அகற்றுவதற்கு முன் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்பட முக்கிய அமைச்சர்களுக்கு தகவல் தரப்பட்டது – தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் விளக்கம்.

* திருத்தணி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டெடுப்பு.

* மருத்துவர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது உச்ச வரம்பை 65 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

* இலங்கை புங்குடுதீவில் பள்ளி மாணவி வித்யா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு தூக்கு – யாழ்ப்பாணம் நீதிமன்றம் தீர்ப்பு.

* ராஜ்பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, அரசு மருத்துவ கல்லூரி கட்டணத்தை வசூலிக்க கோரி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனு.

* ஜெயலலிதா மரணம் தொடர்பான தமிழக அரசின் விசாரணை ஆணையத்தை வரவேற்கிறோம். நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் – அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி.

* அமெரிக்க ராணுவ விமானங்களை வாங்க உள்ளோம். காவல்துறையை நவீனமயமாக்க ரூ 25,060 கோடி நிதி ஒதுக்கீடு – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

* டெல்லியில் பிரதமர் இல்லம் முன்பு தமிழக விவசாயிகள் திடீர் மறியலால் கைது செய்யப்பட்டனர்.

* அமெரிக்க அமைச்சர் மேட்டீஸ் ஆப்கான் சென்றுள்ள நிலையில் தலைநகர் காபூலில் 25 நிமிடங்களுக்குள் 3 குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளன.

* சென்னை, கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் மணிவிழா : இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு க ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* 7வது ஊதிய குழு தொடர்பான இறுதி அறிக்கையை முதல்வர் எடப்பாடியிடம் ஒப்படைப்பு.

* அனிதா மரணம் தொடர்பாக காவல்துறையினர் இடைக்கால அறிக்கை மட்டுமே தந்துள்ளனர் – தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன்.

* அனிதா மரணம் தொடர்பாக 15 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையை அளிக்க அரியலூர் எஸ்பி-யிடம் கேட்டுள்ளோம். வேறு படிப்பைத் தேர்வு செய்ய அனிதா தயாராக இருந்த போதிலும் அவர் தற்கொலை செய்துகொண்டது சந்தேகம் அளிக்கிறது – தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன்.

* ஜெயலலிதா மரணம் தொடர்பாக மக்களைக் குழப்பும் விதத்தில் அமைச்சர்கள் மாறி மாறி பேசுகிறார்கள். விசாரணை ஆணையத்திற்கு கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் – தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்.

* திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் விவகாரம் : தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், ஜாமீன் கோரி மலையாள நடிகர் திலீப் தாக்கல் செய்த மனு மீதான இறுதி உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* கொலை மிரட்டல் விடுத்ததாக மனைவி மீது நடிகர் தாடி பாலாஜி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

* நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் அதனை எதிர்க்கொள்ளத் தயார் : திருமாவளவன்.

* கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூக்கள் மலரத் தொடங்கின.

* சிறையில் உள்ள கைதிகளுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்த புகாரில் சேலம் மத்திய சிறைகாவலர் பணிநீக்கம்.

* ட்விட்டரில் சோதனை முன்னோட்டமாக எழுத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; இனி 140 எழுத்துகளுக்கு பதில் 280 எழுத்துக்கள் டைப் செய்யலாம் : ட்விட்டர்.