Search
Sunday 21 October 2018
  • :
  • :

இன்றைய பரபரப்பு செய்திகள் 23/10/17 !

* கந்துவட்டி கொடுமை – நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு.

* நெல்லை கந்துவட்டிக்கு தீக்குளித்தவர்களில் சுப்புலட்சுமி குழந்தை மதி சாருண்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

* திரையரங்குகளில் தேசிய கீதம் வாசிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய தயார் – உச்சநீதிமன்றம்.

* எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது : நவ. 8ல் தொடங்கும் படப்பிடிப்பை முதலமைச்சர் பழனிசாமி துவங்கி வைக்கிறார் – ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிவிப்பு.

* அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் முதல்வர் பழனிச்சாமி பதில் மனு தாக்கல்.

* அதிமுக அம்மா அணி சசிகலா, தினகரன் தலைமையிலான அணி என கூறுவது தவறு. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டன என தமிழக முதல்வர் மனுவில் தெரிவித்துள்ளார்.

* இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

* அதிமுக சட்டவிதிப்படி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி கிடையாது – டிடிவி.தினகரன் தரப்பு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் எம்பி.

* சட்டத்தை திருத்த பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால், தற்போது கொண்டுவந்த சட்டத்திருத்தங்கள் செல்லாது – நவநீதகிருஷ்ணன் எம்பி.

* நிதிஆயோக் அமைப்பில் உள்ளவர்கள் விபரீத கருத்துகளை தெரிவிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமர் மோடிக்கு முக.ஸ்டாலின் வேண்டுகோள்.

* ஆர்கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்கள் நீக்கப்படாவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் : முக.ஸ்டாலின்.

* வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த தீபாவின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

* ஜெயலலிதா மரணத்தில் நீதி தேவை என்று கூறியவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர் : டிடிவி தினகரன்.

* 2மாதங்களுக்கு வழங்கப்பட்ட பேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் – முதல்வர் பழனிசாமிக்கு இந்திய கம்யூ மாநிலச்செயலர் முத்தரசன் கடிதம்.

* டெல்லியில் 100வது நாளாக தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்றுடன் நிறைவு – அய்யாக்கண்ணு அறிவிப்பு.

* பொறையார் பேருந்து பணிமனை மேற்கூரை இடிந்து 8 பேர் உயிரிழந்த விவகாரம் : உயர் நீதிமன்ற தானாக முன்வந்து வழக்கு.

* டெல்லியில் நடைபெறுவது விவசாயிகளின் போராட்டம் அல்ல திமுகவின் போராட்டம் – மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

* அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 26ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக டிடிவி.தினகரனுக்கு உத்தரவு.

* பேரறிவாளனின் பரோலை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை.

* வழிபாட்டுத்தலங்கள் பற்றி தரைக்குறைவாக பேசியதாக நடிகர் விஜய் உள்ளிட்ட10பேர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார்.

* நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்த தம்பதியிடம் நீதிபதி கார்த்திகேயன் விசாரணை.

* கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்கக் கோரி திமுக எம்எல்ஏ பிச்சாண்டி வழக்கு.

* இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும் : அமைச்சர் ஜெயக்குமார்.

* திருநெல்வேலியில் குடும்பமே தீக்குளிப்பு. கந்துவட்டிச் சட்டத்தைக் கைவிட்ட காவல்துறை – வைகோ கண்டனம்

* மாறன் சகோதரர்கள் மீதான முறைகேடு வழக்கு: நவ.10-க்கு ஒத்திவைப்பு.

* மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதால் ஆதார் கட்டாயம் – சிபிஎஸ்இ.

* ரஜினிகாந்தின் 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் நடக்கிறது : இயக்குநர் ஷங்கர்.

* தேர்தல் ஆணையம் முடிவு செய்வதற்கு முன்னரே இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என பேசி வருவது யார் கொடுக்கும் தைரியத்தில் – கனிமொழி.

* மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்ததாக ஹெச்.ராஜா கூறிய விவகாரம் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன்.

* கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் திருமாவளவன் சந்திப்பு.

* வங்கிகள், நிதி நிறுவனங்களில் ரூ.50,000க்கு மேல் செலுத்துபவர்களிடம் அசல் ஆவணங்களை சரிபார்க்க மத்திய அரசு உத்தரவு.

* அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்களை கண்டித்து காசிமேட்டில் மீனவர்கள் சாலை மறியல் – பிரதான சாலைகள் மூடல்.

* குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 201 பாலசேவிகா பணியிடங்களை உருவாக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு.

* தமிழிசை செளந்தரராஜன் வீட்டை முற்றுகையிட்டு, அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் கைது.

* நெல்லையில் 4 பேர் தீக்குளிப்புக்கு காரணமான கந்துவட்டிக்காரர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.

* வட பழனியில் உள்ள நடிகர் விஷாலின் அலுவலகத்தில் மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் சோதனை.

* நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது – நடிகர் கருணாஸ்.