Search
Sunday 21 October 2018
  • :
  • :

இன்றைய பரபரப்பு செய்திகள் 04/11/17 !

* தற்போது வரை ஏரிகள் ஏதும் நிரம்பவில்லை; ஏரிகளில் தற்போது உள்ள குடிநீரை 3 மாதத்திற்கு பயன்படுத்தலாம். மழை பாதிப்பு குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் – சென்னை மாநகராட்சி.

* இந்து தீவிரவாதம் குறித்து கருத்து கூறிய நடிகர் கமல்ஹாசனை சுட்டுக் கொல்லவேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும் – இந்து மகாசபை தேசிய துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா.

* இந்து மகாசபை தேசிய துணைத் தலைவர் சிறையில் இடமில்லாததால் என்னை சுட்டுக் கொல்ல நினைக்கிறார்கள் – நடிகர் கமல்.

* திமுக ஆட்சி வந்தவுடன் வெளிநாட்டு வாழ் தமிழர் நல வாரியம் செயல்படுத்தப்படும் : ஷார்ஜா விழாவில் மு க ஸ்டாலின் உறுதி.

* இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் கூற முடியாது என்று கூறிய நடிகர் கமல் மீது வழக்குப்பதியக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

* அரசைக் குறை கூறிய ஸ்டாலின் உலகப் பயணம் சென்றுள்ளார். இதுதான் எதிர்க் கட்சித் தலைவரின் மக்கள் மீதான அக்கறை – மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கிண்டல்.

* இந்து தீவிரவாதம் என கமல் கூறியது தவறு. எந்தவொரு மதமும் தீவிரவாதத்தை வலியுறுத்துவதில்லை : அமைச்சர் செங்கோட்டையன்.

* கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜின் காவலை நவ.6ம் தேதிவரை நீடித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு.

* ஆற்றுப்படுக்கைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி 5,000 பேருக்கு மாற்று வீடுகள் தரப்பட்டுள்ளன : சென்னை மாநகராட்சி.

* கனமழையால் விழுந்த 70 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 22 சுரங்கப்பாதைகள் பயன்பாட்டில் உள்ளன : சென்னை மாநகராட்சி.

* தங்களை பாதுகாத்துக்கொள்ளவே முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்கிறார்கள் – டிடிவி.தினகரன்.

* மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நவ.19ம் தேதி நடைபெறும் என பதிவாளர் அறிவிப்பு.

* அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அமைக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

* பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை முறைப்படுத்த தனி விதிகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

* நான் ஓட்டு சேகரிக்க வரவில்லை. சோறு சேகரிக்கவே வந்துள்ளேன் – விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நடிகர் கமல் பேச்சு.

* ஒருவர் டெல்லியில் இருந்து என்னை தமிழ் பொறுக்கி என்றார் நான் பொறுக்கிதான். அறிவு, ஞானம் வரும் போது பொறுக்கி என்பதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன் : நடிகர் கமல்ஹாசன்.

* அரசியல்வாதிகள் தனியாக இருக்கிறார்கள் என நினைத்துவிடாதீர்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என கற்றுக் கொடுத்ததை மறந்துவிட்டீர்கள் – நடிகர் கமல்ஹாசன்.

* திருப்பூர் : வழக்கு விசாரணைக்காக பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 3 சிறுமிகள் தப்பியோட்டம் – காப்பக நிர்வாகி புகார்.

* மதுரை பழங்காநத்தம் பகுதியில் வைரஸ் காய்ச்சலுக்கு செந்தில் என்பவர் உயிரிழப்பு.

* நாகை : திருவாலி பகுதியில் வாய்க்காலில் தவறி விழுந்த 3ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.

* தஞ்சை : அம்மாப்பேட்டை அடுத்த நரியனூரில் போலிச் சான்றிதழ் விவகாரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.

* பீகார் : பெகுசாராய் அருகே கங்கை ஆற்றில் புனித நீராடும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி.

* கேரளாவில் மீன்பிடிக்கும்போது கப்பல் மோதியதால் இறந்த மீனவர் ஆண்டனி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி : முதலமைச்சர் பழனிசாமி.

* கன்னியாகுமரி : கண்ணுமாமூடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி உள்ளிட்ட 100 பேர் கைது.

* நெல்லை : வண்ணாரப்பேட்டை பகுதியில் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த டயர் நிறுவனத்திற்கு சீல் – ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு.

* விருதுநகர் : ஓ.கோவில்பட்டி துணை சுகாதார நிலையத்தில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் பலி.

* திருச்சி தெப்பக்குளம் பகுதியில் கந்துவட்டி கொடுமையால் ரயில்வே ஊழியர் பசுல்உல்லா தற்கொலை முயற்சி : அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* காஞ்சிபுரம் மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்.

* தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை , ஒரத்தநாடு , உளுரில் கனமழையால் நெற்பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* கோவை ஆனைக்கட்டி சாலையில் வீரபாண்டி குட்டையில் சேற்றில் சிக்கிய யானையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

* குஜராத்தில் அக்ஸர்தம் கோயில் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அஜ்மீரி அப்த்ல் ரசித் என்பவரை அகமதாபாத் போலீஸ் கைது செய்தனர்.

* சென்னை : பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியின் ஒரு கரையை உடைத்து வெள்ளநீரை பொதுப்பணித்துறை ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர்