Search
Friday 17 August 2018
  • :
  • :

தானா சேர்ந்த கூட்டத்தில் நானா தான வீணா போன

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சூர்யா பிறந்தநாளான நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், சூர்யா ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து அளிக்க படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் முடிவு செய்திருக்கிறார். அதன்படி, அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு ரிலீஸ் செய்கிறது. “நானா தான வீணா போன” என்ற வரிகளில் தொடங்கும் இந்த பாடலை வருகிற வியாழனன்று (ஜுலை 27-ஆம் தேதி) வெளியிட படக்குழு முடிவு செய்கிறது.

ஸ்டூடியோ கிரீன் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கார்த்திக், செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.