Search
Monday 22 October 2018
  • :
  • :

ஸ்ட்ரைக் உறுதி!!

தமிழ் திரைப்பட சங்கம் சார்பில் மார்ச் 1-ஆம் தேதி முதல் எந்தப் படமும் ரிலீஸாகாது என அறிவிக்கப்பட்டிருந்தது. நடந்து வந்த அத்தனை பேச்சு வார்த்தைகளும் தோலிவியில் முடிந்ததையடுத்து, ஸ்டிரைக் உறுதியாகி இருக்கிறது.

“டிஜிட்டல் சர்விஸ் புரவைடெர்ஸ்” உடனான ஒப்பந்தம் தொடர்பாக எந்த ஒத்திசைவும் ஏற்படாத சூழலில், மீண்டும் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு திருப்தி இல்லாத நிலையிலேயே பேச்சுவார்த்தை முடிவடைந்திருக்கிறது.

இதனால் வருகிற மார்ச் 2-ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.