Search
Wednesday 19 September 2018
  • :
  • :

சூர்யாவின் புதிய தோற்றம்.. படம் உள்ளே !!

சூர்யா எப்போதுமே மெனக்கெட்டு நடிக்கக் கூடிய ஒரு நடிகர். தான் ஏற்று நடிக்கக் கூடிய கதாபாத்திரத்திற்காக தன்னை மிகவும் வருத்திக் கொள்ளக் கூடியவர். சமீபத்தில் வெளியான “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படத்தில் மிகவும் சாதாரணமாக நடித்திருந்தார்.பல படங்களில் வித்தியாசமாய் பார்த்ததால் என்னவோ, இந்தப் படத்தில் சாதாரணமாக நடித்திருந்தது கூட வித்தியாசமாய் தெரிந்தது.

இந்நிலையில் அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தில் மீண்டும் தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ள உள்ளார். ஏழாம் அறிவு படத்தில் உள்ளது போல கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாறுகிறார்.

இந்தப் படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்குகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா செல்வராகவனோடு கைகோர்க்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்காக சூர்யா தனது உடலை ஏற்றுவதற்காக உடற்பயிற்சி மேற்கொள்ளும் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.