Search
Wednesday 15 August 2018
  • :
  • :

பாலைவன தேசத்தில் சிவகார்திகேயன்!

தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜா பார்த்து பார்த்து செதுக்கி வரும் படம் வேலைக்காரன். சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா முதல் முறையாக இணையும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மலையாளப் பட உலகின் முன்னணி நாயகன் ஃபகத் ஃபாசில் வேலைக்காரன் படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். அதுமட்டுமில்லாமல் நடிகை சினேகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார். இவர்களோடு பிரகாஷ் ராஜ், ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதிஷ், சார்லி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 24AM ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

படத்தின் அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப் பட்டுவிட்ட வேளையில், இன்னும் ஒரேயொரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக படக்குழு ராஜஸ்தான் விரைந்துள்ளது.

அனிருத்தின் ஸ்டைலில் இளஞர்களைக் கவரும் வகையில் வந்திருக்கும் இந்த டூயட் பாடலின் படப்பிடிப்பில் சிவகார்திகேயனும், நயன்தாராவும் கலந்து கொள்கிறார்கள். மேலும் அஜ்மீர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் படமாக்கத் திட்டமிட்டிருகிறார்கள்.

வேலைக்காரன் வருகிற டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ் தினத்தில் திரைக்கு வர உள்ளது. அதே நாளில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “ஸ்கெட்ச்” படமும் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.