Search
Friday 25 May 2018
  • :
  • :

இமானின் இசையைப் பரிமாறும் சிவகார்த்திகேயன்

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. இதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி, ஆர் கே சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளார்கள்.

கவுரவ் இப்படத்தை இயக்கியுள்ளார். தூங்கா நகரம், சிகரம் தொடு படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு மேற்கொள்ள, பிரவீன் கே எல் படத்தொகுப்பாளராக பணிகளைக் கவனிக்கிறார். சமீபத்தில், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் மற்றும் நடிகர் தனுஷ் வெளியிட்ட டீசரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இப்படத்தின் இசையை நாளை மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிட இருக்கிறார். படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.