Search
Friday 19 October 2018
  • :
  • :

இன்னொரு வெங்கட் பிரபு ஆகிறாரா சிவா??

அண்ணன் – தம்பின்னா அண்ணன் – தம்பி, அப்படி ஒரு அண்ணன் – தம்பி வெங்கட் பிரபுவும் பிரேம்ஜி அமரனும். கதை இல்லாமல் கூட படம் எடுப்பேன் ஆனா என் தம்பி இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என்று உறுதியாக இருப்பவர் வெங்கட் பிரபு. சென்னை28 தொடங்கி சென்னை28 பார்ட் 2 வரை அவரின் எல்லா படங்களிலுமே பிரேம்ஜி தனியாக தெரிவார். அப்படி தம்பிக்காக படத்தில் இடம் வைத்திருப்பார் வி.பி.

அதே போல எப்படியாவது தன் தம்பியையும் பெரிய ஆளாக மாற்றி விடும் முயர்ச்சியில் தான் “சிறுத்தை” சிவா களமிறங்கியிருப்பார் போல.

அஜித் நடிப்பில் 2014 ஆம் வெளியான வீரம் படத்தில், அஜித்திற்கு தம்பியாக சிவாவின் தம்பி பாலாவும் நடித்திருப்பார். “அன்பு” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான பாலா, அதன் பிறகு சரியான படங்கள் அமையாமல் தவித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான், அண்ணன் இயக்கிய படத்திலேயே வாய்ப்பு கிடைத்தது அவருக்கு.

இந்நிலையில் சிவா, விவேகம் படத்திற்கு பிறகு அஜித்தை வைத்து இயக்கவிருக்கும் “விஸ்வாசம்” படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பாலா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விவேகம் படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியில், தம்பிக்கு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை தந்திருக்கும் சிவா அஜித்தை முடித்து விடாமல் இருந்தால் சரி.