Search
Tuesday 27 June 2017
  • :
  • :

சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகல்

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’. சுந்தர்.சி இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவித்தனர். இந்நிலையில், இப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகி இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசனால் தொடர முடிய வில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

சமீபத்தில் பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், சுந்தர்.சி, குஷ்பு, கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.