Search
Thursday 21 June 2018
  • :
  • :

ஹீரோவாகிறார் நாளைய சூப்பர் ஸ்டார்!

காசு மட்டும் இருந்தால் போதும் அரசியலோ, சினிமாவோ கதவைத் தேடி வரும் என்பது தான் இன்றைய நிலை.

சினிமாவிலிருந்து நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிற நேரத்தில், அந்த இடத்தை இட்டு நிரப்ப சினிமாவிற்குள்
குதிக்க இருக்கிறார் அந்த பிரபலம்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கிற கதாநாயகிகளை தனக்கு ஜோடியாக விளம்பரங்களில் நடிக்க வைத்து , இளைஞர்களின் இதயத்தில் புகையை
கிளப்பி வருகிறார். இவரது ரொமாண்டிக் விளம்பரங்களைப் பார்த்து ரசிகர்கள் எல்லாம் பித்து பிடித்து கிடக்கிறார்கள்.

சமீபத்தில் கூட மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் ரஜினி, கமலை விட எல்லோரது கண்களும் இவர் மீதே இருந்தது.
திடீரென ஒரு பெரிய தொகையை நடிகர் சங்கத்திற்கு நன்கொடை அளித்து அனைவரையையும் வியப்பில் ஆழ்த்தினார்.
விளம்பர படத்தில் நடித்ததுக்கே இவ்வளவா?? என்று கோலிவுட்டே வாய்பிளந்து கிடக்கிறது.

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே, நேரடியாக ஹீரோவாகப் போகிறார் இப்போது. ஒரு உதவி இயக்குநர் சொன்ன கதை பிடித்துப் போனதால் அதையே
படமாக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் வேறு யாருமல்ல நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான். ஹீரோயினாக நயன்தாரா நடித்தாலும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.