Search
Saturday 21 April 2018
  • :
  • :
Latest Update

சங்கிலி புங்கிலி கதவ தொற – விமர்சனம்

அப்பாடா தமிழ் சினிமாவில பேயெல்லாத்தையும் விரட்டி, அடிச்சிட்டாங்கனு நெனச்சுக்கிட்டிருந்தா, அதுல ஒண்ணு சம்மர் வெகேஷனுக்கு சங்கிலி புங்கிலி கதவ தொறனு மறுபடியும் உள்ள வந்திருக்கு. என்னடா? எப்டிடானு எட்டிப் பாத்தா, தொடர் தோல்வினால துவண்டு போயிருந்த ஜீவா தான், ஒரு பெர்பெக்ட் பிரேக் குடுக்க பிளான் பண்ணி, பேயோட பார்ட்னர்ஷிப் போட்டு களத்துல எறங்கிருக்காரு.

சரி, எறங்குனாறே… சிக்ஸூ, சிக்ஸா வெளுத்தாரா இல்ல சிங்கிள்ஸா அடிச்சாரா… டார்கெட் அக்சீவ் பண்ணாரா இல்ல டக் அவுட் ஆனாரா, பார்ட்னர்ஷிப் வொர்த்தா இல்ல வேஸ்டா? அப்டிங்கிறது தான் இப்ப எல்லாரோட கேள்வியும்…

கொஞ்சம் பொறுமையா இருங்க. படத்துக்கான கதைய மொத சொல்றேன். அப்பறமா படத்தோட கதைய. ஓகே வா?

சொந்த வீடு இல்லாம, மாமா வீட்ல அம்மாவோட தங்கிருக்க ஜீவாவுக்கு ஊருக்கு வெளிய இருக்க பங்களா மேல ஒரு கண்ணு. அந்த பங்களாவ எப்டியாவது வாங்கிடனும்னு பிளான் பண்ணும் போது… லாட் ஆப் டிஸ்டபன்ஸூ, பிராப்ளம்ஸூ. அப்டி இப்டி எல்லாத்தையும் சால்வ் பண்ணி, ஒன் பைன் டே பங்களால பால் காய்ச்சிர்றாரு ஜீவா. அந்த நேரம் பாத்து, தம்பி ராமையா பேமிலியோட வந்து, ஐ ஆம் த ஓனர் ஆப் திஸ் பங்களா அப்படினு அட்டெண்டன்ஸ் போடுறாரு. இந்த கன்பியூசன்ல இருந்து ஜீவா கழண்டு வர்றதுக்குள்ள, பிம்பிளிக்கா பியாபினு பங்களாக்குள்ள பேயோட பெர்பாமன்ஸ் ஸ்டார்ட் ஆயிடுது.

அந்த பேயோட பயோடேட்டா என்ன? யாரு ஆனா பங்களா ஓனரு? அப்டிங்கிறதெல்லாம் ஆப்டர் இண்டர்வெல். இது தான் படத்துக்கான கதை.

இப்போ படத்தோட கதைய பாப்போமா?…

அமானுஷ்யத்தோட அலையன்ஸ்… ஜீவாவுக்கு இது தான் பர்ஸ்ட் டைம். ஆனாலும் அஸ் யூசுவல்… அலட்டிக்காம அட்ராசிட்டி பண்ணிருக்காரு ஜீவா. இவருக்கு ஸ்ரீதிவ்யா ஜோடி. குட் காம்பினேஷன், ஸோ க்யூட். ஸ்ரீதிவ்யாவின் நடிப்பு சிறப்பு நோ டவுட்டு.

ராதிகா, ராதாரவி, சூரி, தம்பி ராமையா, தேவதர்ஷினி, கோவை சரளா, மொட்ட ராஜேந்திரன், இளவரசன்னு ஏகத்துக்கும் ஸ்டார்ஸ். அவங்கவங்க சீன்ல அவங்கவங்க ஸ்டாம்ப்ப அழுத்தம் திருத்தமா அழகா குத்திட்டு போயிருக்காங்க.

சந்தானம் இல்லாம ஃபில் இன் த ப்ளாங்க்கா இருப்பாரே ஜீவா. இது தான் படம் பாக்கப்போன எல்லாருக்கும் இருந்த ஃபீலிங்கு. பட் அந்த இடத்த ஃபுல் ஃபில் பண்ணி அனுப்பியிருக்காரு சூரி. 

டபுள் மீனிங் டயலாக்ஸ அவாய்ட் பண்ணிருந்திருக்கலாம்.

சீனுக்கு சீன் பிஜிஎம்ல பொழந்து கட்டியிருக்க விஷால் சந்திரசேகரு, பாட்டு சீன்ல எல்லாரையும் பாப்கார்ன் வாங்க வச்சிடுறாரு.

மேக்ஸிமம் சூட் டார்க்ல தான். ஆனாலும் சத்யன் சூரியன் பார்வையில சீன்ஸ் எல்லாம் பிரைட்டா இருக்கு.

அறிமுக இயக்குநர் ஐக் ஒரு காமெடி த்ரில்லர டிபரண்ட்டா ட்ரை பண்ணிருக்காரு. கங்கிராட்ஸ்.

சினிமாவின் பார்வையில் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – காமெடி காலிங்பெல் அடிக்குது.