Search
Thursday 21 June 2018
  • :
  • :

வெற்றிக்கூட்டணியில் இணைந்த சமந்தா

‘வேலைக்காரன்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தைப் பொன்ராம் இயக்குகிறார். இதில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. சிம்ரன், சூரி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவாகும் 3-வது படம் இது. படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களிலேயே இதன் சேட்டிலைட் உரிமையை ஒரு டி.வி. நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது.

சமந்தாவுக்கு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு தனது காட்சிகளை நடித்து கொடுக்க இருக்கிறார்.