Search
Wednesday 12 December 2018
  • :
  • :

ரம்ஜான் அன்று ரசிகர்களை சந்திக்க வரும் ரஜினி!!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் “காலா” திரைப்படம் தான் இப்போதைய சினிமா வட்டாரத்தின் ஹாட் டாபிக். முதலில் மார்ச் மாதத்தில் வெளியிடுவதாக தயாரிப்பாளர் தனுஷ் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் காரணமாக தள்ளிப்போடப் பட்டது.
அதன்படி, ஜூன் 7 -ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே “காலா” இசைவெளியீட்டு விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

இந்நிலையில், படத்தை ரம்ஜானுக்கே வெளியிட்டுக் கொள்ளலாம் என தயாரிப்பு தரப்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் “காலா” மீண்டும் தள்ளிப்போகலாம் என தெரிகிறது. இதற்காக ஜூன் 14-ஆம் தேதியையும் முன்பதிவு செய்து வைத்திருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.