Search
Friday 24 November 2017
  • :
  • :

பிரியாவின் அடுத்த படம்!

பிரபல தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் பிரியா பவானி சங்கர்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு ப்ரமோஷன் ஆகி பிரியா நடித்த முதல் படமாகிய “ மேயாத மான்” கடந்த தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரியா பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் “பருத்திவீரன்” கார்த்தி நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.