Search
Wednesday 19 September 2018
  • :
  • :

பிரபுதேவா-வை வீழ்த்திய நயன்தாரா!!

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகர் பிரபுதேவாவும், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவும் ஒரு காலத்தில் “ரிலேஷன்சிப்”-இல் இருந்தவர்கள். இவர்கள் அன்பு பாராட்டிய விதம், திருமணம் வரை போனது. ஏனோ, எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் நாகரீகமாக பிரிந்தார்கள்.

 

இது நடந்து சில வருடங்கள் உருண்டோடி விட்ட நிலையில், இப்போது இருவரும் அவரவர் வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் தனித்தனியாக நடித்திருக்கும் “லக்ஷ்மி” மற்றும் “கோலமாவு கோகிலா” ஆகிய படங்களின் டிரைலர் ஒரே நாளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

“லக்ஷ்மி” திரைப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், “கோலமாவு கோகிலா” படத்தை நெல்சனும் இயக்கி இருக்கிறார்கள். முறையே சாம் சி.எஸ் மற்றும் அனிருத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

 

இதில் விசேசம் என்னவென்றால், “கோலமாவு கோகிலா” படத்தின் டிரைலர் யூ-டியூப் தளத்தில் முதலிடத்தில் ட்ரெண்டாகி இருக்கிறது. கடும் போட்டியில் பின் தங்கிய “லக்ஷ்மி” திரைப்படத்தின் டிரைலர் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது.

இப்போது தெரிகிறதா, நயன் ஏன் லேடி சூப்பர் ஸ்டார் என்று??