Search
Thursday 19 October 2017
  • :
  • :

ஐகோர்ட் உத்தரவால் உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள மெர்சல் படம், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு இடையே நேற்று வெளியான இப்படத்தின் டீசர் சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்க்கப்பட்டு புதிய சாதனை படைத்தது.

மெர்சலுக்காக ட்விட்டரில் எமோஜி பெற்றது, இப்படத்தின் தலைப்புக்கு டிரேட் மார்க் வாங்கியது உள்ளிட்டவை, தென்னிந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் செய்திடாத ஒன்று. முதன்முதலாக அந்தப் பெருமையைப் பெற்றுள்ளது மெர்சல்.

இந்நிலையில் மெர்சல் படத்தலைப்பை பயன்படுத்தக்கூடாது என தயாரிப்பாளர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அக்.3ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என ஐகோர்ட் தடை விதித்திருந்தது.

தற்போது அந்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டதுடன், மெர்சல் என்ற பெயரிலேயே அத்திரைப்படம் வெளியிடலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இது படக்குழுவினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியில் உள்ளனர்.