Search
Friday 19 January 2018
  • :
  • :

‘காலா’வின் மிரட்டலான முதல் பார்வை

ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘காலா’ என்று இன்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ‘கபாலி’ படத்தில் கபாலீஸ்வரன் என்ற பெயரை எப்படி ‘கபாலி’ என்று அழைத்தார்களோ, அதேபோல் இப்படத்தில் கரிகாலன் என்ற பெயரை சுருக்கி ‘காலா’ என்ற பெயரில் தலைப்பாக வெளியிட்டுள்ளார்கள்.

தலைப்பு வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். அதன்படி, ‘காலா’ படத்தின் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இரண்டு போஸ்டர்களிலும் ‘கபாலி’ படத்தைப் போன்று நரைத்த தாடியுடன் இப்படத்திலும் வருகிறார்.

ஒரு போஸ்டரில் முகத்தில் ரத்தக்கறையுடனும், காயங்களுடனும் கோபத்துடன் இருப்பதுபோல் இருக்கிறது. மற்றொரு போஸ்டரில் மும்பை தாராவி பின்னணியாக வைத்து, நடுவில் சாதாரண லுங்கியுடன், கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு ஜீப்பின் மீது ரஜினி அமர்ந்துகொண்டு இருப்பதுபோல் வெளியிட்டுள்ளனர். இந்த இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் மற்றொரு நடிகையான பாலிவுட் நடிகை அஞ்சலி பாட்டீலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 28-ந் தேதி தொடங்கவிருக்கிறது. மும்பையை மையப்படுத்திய கதையாக இது உருவாகவிருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையிலும் நடத்தவிருக்கிறார்கள். இப்படம் குறித்த மேலும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.





Warning: Invalid argument supplied for foreach() in /home/cinemaparvai78/public_html/cinemapaarvai/wp-content/plugins/popliup/public/class-popliup-public.php on line 299