Search
Thursday 21 June 2018
  • :
  • :

மாஸ்+மாஸ்= பக்கா மாஸ்!

 

இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். ரசிகர்களின் ரசனைக்கேற்ப அப்படியே படம் எடுக்கக் கூடியவர் என்ற நம்பிக்கை இவரின் மேல் எல்லா தயாரிப்பாளர்களுக்குமே வந்திருக்கிறது.

அதேபோல் தான், சிவகார்த்திகேயனும். அடுத்தடுத்து வெற்றிகளாக மட்டுமே தந்து ஒரு மாஸ் நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
சிவா நடித்தாலே படம் ஹிட் என்ற நிலைமை இருக்கிறது இப்போது. இதை விட ஒரு தயாரிப்பாளருக்கு வேறு என்ன வேண்டும்?

இப்படி, ரசிகர்களையும் தயாரிப்பாளரையும் மகிழ்விக்கக் கூடிய இரு கலைஞர்கள் இணையும் படமென்றால் எதிர்பார்ப்பு இருக்கத் தானே செய்யும்..

சிவகார்த்திகேயனும், விக்னேஷ் சிவனும் முதல் முறையாக இணைகிறார்கள். இருவரின் ஆல்-டைம் தேர்வாக இருக்கக் கூடிய அனிருத் தான்
இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தை தயாரித்த “ஸ்டுடியோ கிரீன்”
சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

மார்ச் மாதம் துவங்கவுள்ள இப்படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.