Search
Thursday 20 September 2018
  • :
  • :

ரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்!!

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். நடிகை மேனகாவின் மகளான இவர், மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் ஹீரோயின் ஆனவர்.

விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது விக்ரம் ஜோடியாக “சாமி ஸ்கொயர்” படத்திலும், விஷால் ஜோடியாக “சண்டக்கோழி 2” படத்திலும் நடித்து வருகிறார். விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் “தளபத்ய் 62” படத்திலும் இவர் தான் கதாநாயகி.

இந்நிலையில், தன்னைப் பற்றிய ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்காக https://www.keerthysuresh4us.com/ என்ற வெப்சைட்டைத் தொடங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். அவர் நடித்த படங்கள், நடித்துக் கொண்டிருக்கும் படங்கள், அதில் உள்ள புகைப்படங்கள், பாடல் காட்சிகள், பேட்டிகள் என எல்லாமே தனித்தனியாக அட்டவணைப்படுத்தப்பட்டு, ரசிகர்கள் எளிதாகத் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த வெப்சைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.