Search
Wednesday 18 July 2018
  • :
  • :

வேட்டைக்குத் தயாராகும் கார்த்தி!

சதுரங்க வேட்டை வெற்றிக்குப் பிறகு இயக்குனர் H.வினோத் உருவாக்கியிருக்கும் படம் “தீரன் அதிகாரம் ஒன்று”. 1995 லிருந்து 2005 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் நடந்த பல்வேறு உண்மையான க்ரைம் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தியோடு முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள தீரன் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் வித்தியாசமான ட்ரைலர் வெளியாகி அனைத்து தரப்பிலும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பொன்று வெளியாகி உள்ளது.

அதில், “ தீரனின் வேட்டை நவம்பர் 17 முதல்” என்று கூறப்பட்டிருக்கிறது.

வழக்கமான போலீஸ் கதை படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு உருவாக்கப்பட்டுள்ள தீரன் அதிகாரம் ஒன்று படம் கார்த்திக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.