Search
Tuesday 27 June 2017
  • :
  • :

விஸ்வரூபம் 2ம் பாகத்தின் முதல் பார்வை வெளியிட்டார் கமல்

கடந்த 2013-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியான ‘விஸ்வரூபம்’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, சில மாதங்களிலேயே அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

ஆனால், சில காரணங்களால் பட வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில், இந்த வருடத்தில் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர்.

அதற்கு முன்னோட்டமாக தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்பின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன் படி, ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி பதிப்பின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஆவலோடும், எதிர்பார்ப்போடும் காத்திருந்த ரசிகர்களை, விஸ்வரூபம்-2ன் போஸ்டர் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.