Search
Tuesday 19 September 2017
  • :
  • :

களத்தூர் கிராமம் – விமர்சனம்

ஏ ஆர் மூவி பாரடைஸ் தயாரிப்பில் கிஷோர், யாக்னா ஷெட்டி, மிதுன் குமார், சுலில் குமார் மற்றும் பலர் நடித்துள்ள வெளியாகியுள்ள படம் ‘களத்தூர் கிராமம்’. இப்படத்தை சரண் கே அத்வைதன் இயக்கியுள்ளார்.

கருவக்காட்டுக்குள் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கான சிறிய கிராமம் களத்தூர் கிராமம். இக்கிராமத்தில் ஊர்த்தலைவன் போல் வலம் வரும் கிஷோருக்கு, பெண்கள் விசயத்தில் தடுமாற்றமுள்ள சுலில் குமார் நெருங்கிய நண்பன். சுலில் குமாரின் விசயம் தெரிந்தும், கிஷோர் உத்திரவாதம் தந்தால் பெண்ணைக் கட்டித்தர தயார் என்கின்றனர் பெண் வீட்டார்.

கிஷோர் அதற்கு உத்தரவாதம் தருவதாகக் கூறி சுலில் குமார் குடும்பத்திடம் சொல்ல, அவர்கள் நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிக்கிறார்கள். நிச்சயத்தார்த்தம் அன்று கிஷோரிடம் பெரியவர் ஒருவர் வேலைக்கு சென்ற தன் பேத்தியை முதலாளி கடத்தி வைத்திருப்பதாகவும், அவளை மீட்டுத் தருமாறும் கேட்டுக்கொள்கிறார்.

அந்த பெண்ணைக் காப்பாற்றும் கிஷோர் அவளைத் திருமணமும் செய்து கொள்கிறார். இதனால் காலதாமதமாகி விட, உத்தரவாதம் தர வேண்டிய கிஷோரை எதிர்பார்த்திருந்த பெண் வீட்டார், நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த சுலில் குமார் கிஷோரைப் பழிவாங்க துணிகிறார். இருவருக்கும் சண்டை வலுக்கிறது. ஒரு கட்டத்தில் எதிர்பாராதவிதமாக சுலில் குமாரின் மரணத்திற்கு காரணமாகி விடுகிறார் கிஷோர்.

இப்படியாக கதை நகர்கிறது. மொத்தத்தில், தான் கடத்தி வைத்திருந்த பெண்ணை மீட்டுச் சென்று விட்ட ஆத்திரத்தில் இருக்கும் வில்லன், தனக்கு திருமணம் நடத்தி வைப்பதாக உத்தரவாதம் அளித்து, அதைச் செய்யாத ஏமாற்றத்தில் சுலில் குமார், கிஷோர் தான், தன்னுடைய தந்தை என்று தெரியாமல், சுலில் குமாரின் மரணத்திற்கு கிஷோரைக் காரணம் என எண்ணும், சுலிலின் மகனாக வளரும் மிதுன் குமார் – இவர்களின் பழிவாங்கும் படலத்தில் நிகழ்ந்தது என்ன என்பது தான் படத்தின் கதை.

கிஷோர் கிடாத்திருக்கை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். வழக்கம் போல இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். யாக்னா ஷெட்டி, மிதுன் குமார் என அனைவரது நடிப்பிலும் குறைவில்லை.

இசைஞானி இளையராஜாவின் பின்னனி இசையும், பாட்டும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. புஷ்பராஜின் ஒளிப்பதிவு கிராமத்து வாழ்வியலை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

உயிரோட்டமுள்ள கதைக்கு சரியான நடிகர்களைத் தேர்வு செய்து, சிறப்பாக வேலைவாங்கி இருக்கிறார் இயக்குநர்.

கதைக்களம் எண்பதுகளுக்கான காலகட்டத்தில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. தற்போதைய சூழலுக்கும், எண்பதுகளின் சூழலுக்கும் இடையிலான வித்தியாசத்தை காட்சியமைப்பில் காட்டியிருந்தால் பார்ப்பவர்களுக்கு குழப்பமில்லாமல் இருந்திருக்கும்.

சினிமாவின் பார்வையில் ‘களத்தூர் கிராமம்’ – வாழும்





Warning: Invalid argument supplied for foreach() in /home/cinemaparvai78/public_html/cinemapaarvai/wp-content/plugins/popliup/public/class-popliup-public.php on line 299