Search
Tuesday 17 October 2017
  • :
  • :

மும்பை காலா 12ம் தேதி முதல் சென்னையில்

சங்கர் இயக்கத்தில் எந்திரன் இரண்டாம் பாகம் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், பா ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் ஒப்பந்தமாகி, மும்பையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

கடந்த சில வாரங்களாக மும்பையில் நடந்து வந்த ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே மருத்துவ பரிசோதனைக்காக
அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுவிட்டார் ரஜினி. அவரைத் தவிர்த்து மற்ற அனைவரும் சென்னை திரும்பி விட்டனர்.

இந்நிலையில் ‘காலா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற 10-ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கவிருக்கிறது. சென்னை பூந்தமல்லியை அடுத்த ஈ.வி.பி.கார்டனில் ‘காலா’வுக்காக மும்பை தாராவி பகுதியைப் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செட்டில் ‘காலா’வின் படப்பிடிப்பு ஜூலை 10-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து பல நாட்கள் நடைபெறவிருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் 12-ஆம் தேதி முதல் காலா படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ளவிருக்கிறார்.