Search
Monday 18 December 2017
  • :
  • :

இனியா நடிக்கும் மியா

‘வாகை சூடவா’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் இனியா. இதில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். இந்த படத்தில் நடித்ததற்காக இனியாவுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மவுனகுரு’, ‘அம்மாவின் கைபேசி’, ‘சென்னையில் ஒரு நாள்’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்த இனியா தற்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ‘மியா’ என்ற இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கிறார். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த இசை ஆல்பத்தை மகேஷ் இயக்கி இருக்கிறார். அபிரஜிலால் – ஜெயன் இணைந்து இசை அமைத்துள்ளனர். அருண் நந்தகுமார் நடனக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

இந்த இசை ஆல்பத்தில் இனியா துணை இயக்குநராக பணியாற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.





Warning: Invalid argument supplied for foreach() in /home/cinemaparvai78/public_html/cinemapaarvai/wp-content/plugins/popliup/public/class-popliup-public.php on line 299