Search
Wednesday 15 August 2018
  • :
  • :

சீமராஜா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு!!

பொன்ராம் – சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள “சீமராஜா” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இன்றுடன் படப்பிடிப்பு நிறைவு பெறுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனமான “24ஏ.எம்.ஸ்டூடியோஸ்” டுவிட்டரில் தகவலை பகிர்ந்திருக்கிறார்கள்.

கிராமப் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

“24 ஏ.எம்.ஸ்டூடியோஸ்” தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.