Search
Monday 18 December 2017
  • :
  • :

ப்ப்பா… யார்றா இது கெளதம்மேனன் படத்தில்

பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ப் பெண் காயத்ரி. ‘ஏன் இப்படி மயக்கினாய்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் விஜய் சேதுபதியுடன் `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை காயத்ரி, விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்து நடித்துள்ள `புரியாத புதிர்’ படம் திரைக்கு வரக் காத்திருக்கிறது. மேலும் காயத்ரி `உலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கெளதம்மேனன் தயாரிக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தில் நடிக்க காயத்ரி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். விஷ்ணு விஷால் – தமன்னா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் அவர்களுடன் காயத்ரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படம் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `பெல்லி சூப்புலு’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கெளதம் மேனனின் உதவி இயக்குநர் செந்தில் வீராசாமி இயக்க உள்ள இப்படத்தை, கெளதம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒண்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மூலம் தயாரிக்கிறார்.





Warning: Invalid argument supplied for foreach() in /home/cinemaparvai78/public_html/cinemapaarvai/wp-content/plugins/popliup/public/class-popliup-public.php on line 299