Search
Friday 19 October 2018
  • :
  • :

“எரும சாணி” தந்த அதிர்ஷ்டம்!!

அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘எரும சாணி’ விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

‘செம போத ஆகாத’, ‘ருக்மணி வண்டி வருது’, ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் ‘ஒத்தைக்கு ஒத்த’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அதர்வா. இப்படங்களைத் தொடர்ந்து ‘டார்லிங்’ மற்றும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படங்களின் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார்.

இப்புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சாம் இசையமைப்பாளராக பணிபுரிய இருக்கிறார். முதலில் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிப்பதாக இருந்தது. தற்போது ஆரோ சினிமாஸ் தயாரிக்கவுள்ளது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘எரும சாணி’ விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் யு-டியூப் தளத்தில் ‘எரும சாணி’ என்ற பெயரில் உள்ள சேனலில் வரும் வீடியோக்களில் நடித்து பிரபலமானவர். முன்னணி நாயகனுடன் இவர் ஒப்பந்தமாகியுள்ள முதல் படம் இதுவாகும். இதனைத் தொடர்ந்து ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தில் நாயகனாகவும் நடிக்கவுள்ளதாக குறிப்பிடத்தக்கது.