Search
Thursday 17 August 2017
  • :
  • :

‘எனக்குள் ஏதோ’ – புதுவிதமான ஹாரர் கதை

நடிகர் ‘பிரின்ஸ்’ தயாரித்து நடிக்கும் படம் ‘எனக்குள் ஏதோ’.

இந்த படம் இன்று சென்னை பனையூரில் உள்ள ஷூட்டிங் ஹவுசில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

“எனக்குள் ஏதோ” திரைப்படம் புதுவிதமான ஹாரர் கதையை மையமாகக் கொண்டது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் “பிரின்ஸ்” கதாநாயகனாக அறிமுகமாகிறார். மனம் கொத்திப் பறவை ஹீரோயின் ஆத்மியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ‘ஒரு டைரக்டரின் காதல் டைரி’ படத்தின் ஹீரோயின் ஸ்வாதி இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் இயக்குனர் நடிகர் சிங்கம் புலி, மனோபாலா, சுவாமிநாதன், ஜெயராஜ், மதுமிதா மற்றும் பல முன்னனி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசை – ஶ்ரீகாந்த் தேவா,
ஒளிப்பதிவு – முரளி போஜன், படத்தொகுப்பு – நாகராஜ், கலை – பாபு, நடனம் – பாலா, சண்டைப்பயிற்சி – விஜய் ஜாக்குவார்.

இந்த படத்தை எழுதி இயக்குகிறார் ‘கார்த்திக் விஜயகுமார்’.