Search
Friday 19 January 2018
  • :
  • :

சோலோ அனுபவங்களைப் பகிர்ந்த துல்கர்

மலையாளம், இந்தி, தமிழில் விக்ரம் – ஜீவா நடித்த ‘டேவிட்’ உள்பட பல படங்களை இயக்கியவர் பிஜோய் நம்பியார். இப்போது, இவரது இயக்கத்தில் துல்கர் சல்மான் தமிழ், மலையாளத்தில் நேரடியாக நடித்திருக்கும் படம் ‘சோலோ’. இதை தெலுங்கு, இந்தியிலும் ‘டப்’ செய்து வெளியிடுகிறார்கள்.

இதில் துல்கர் சல்மான் 4 கெட்டப்களில் நடித்திருக்கிறார். இவருடைய ஜோடியாக தன்ஷிகா, சுருதி ஹரிகரன், ஆர்த்தி வெங்கடேஷ், நேகாசர்மா ஆகியோர் நடித்துள்ளனர். நகைச்சுவை வேடத்தில் சதீஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது துல்கர் சல்மான் பேசிய போது, இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

“இதுவரை நான் நடித்த படங்களில் இதுதான் உலக அளவில் ரிலீஸ் ஆகிறது. அதனால் தான் இது 4 மொழிகளில் வெளியிடப்படுகிறது. நான் நடித்த பெரிய பட்ஜெட் பட வரிசையில் இதுவும் இணைந்துள்ளது.

இந்த படத்தில் எனக்கு நான்கு விதமான வேடம் என்பதால் ஒவ்வொரு வேடத்திலும் ஒரு வித்தியாசம் காட்டி நடித்தேன். இது சவாலாக இருந்தது. இந்த படத்தை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக படமாக்கி இருக்கிறோம். இயக்குனரும், நானும் மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள். தன்ஷிகா, சுருதி தவிர மற்றவர்கள் மராட்டிய மொழி நடிகைகள்.

எனவே, மலையாளப் படத்தை தமிழில் ‘டப்’ செய்து வெளியிடுகிறார்கள் என்று எண்ண வேண்டாம். இது நேரடி தமிழ் படம். அனைவரும் ரசிக்கும் கதையம்சம் கொண்டது” என்றார்.





Warning: Invalid argument supplied for foreach() in /home/cinemaparvai78/public_html/cinemapaarvai/wp-content/plugins/popliup/public/class-popliup-public.php on line 299