Search
Tuesday 27 June 2017
  • :
  • :

என் வழியில் என் மகன் : மம்முட்டி

மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் நடித்த ‘உஸ்தாத் ஹோட்டல்‘, ‘பெங்களூர் டேஸ்’, ‘சார்லி’ உள்ளிட்ட நிறைய படங்கள் வெற்றிகளை வாரிக் குவித்துள்ளன.

இவர் நடிப்பில் கால் பதிக்கும் முன்னரே, திருமண வாழ்க்கையில் காலெடுத்து வைத்து விட்டார். இந்நிலையில், நடிக்க வரும் முன்பே துல்கர் சல்மானுக்கு ஏன் திருமணம் செய்து வைத்தோம் என்பது குறித்து பதில் அளித்துள்ள மம்முட்டி, “ஒரு மனிதனின் வாழ்க்கையில் உறுதியான நிலையை ஏற்படுத்துவது திருமணம் தான். திருமணம் செய்து கொண்டால் பொறுப்பு வரும். வாழ்க்கையில் முன்னேறத் தோன்றும். திருமணம் செய்து கொண்டால் தான் நான் அறிந்து கொண்டதை பிள்ளைகளுக்கு சொல்கிறேன்.

என் வழியை என் மகன் பின்பற்றுகிறான். எனவேதான் நடிக்க வரும் முன்பே அவன் விருப்பப்படி திருமணம் செய்து வைத்தோம். திருமணம் பற்றி நானும் என் மனைவியும் துல்கருடன் பேசினோம். சம்மதம் தெரிவித்ததால் மருமகள் அமல்சுபியாவை திருமணம் செய்து வைத்தோம்.” என்றார்.

சமீபத்தில் மம்முட்டி தாத்தா ஆனார். துல்கர் சல்மான்-அமல் சுபியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு மரியம் அமீரா சல்மான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.