Search
Sunday 21 January 2018
  • :
  • :

சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை விருந்து!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா, சானா கான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், நான்காவதாகவும் ஒரு வேடத்தில் நடித்து வருவதாக சிம்பு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால், நாளுக்கு நாள் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது படக்குழுவினர் மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

அதாவது, ‘பாகுபலி’ பட முதல் பாகத்தின் தொடர்ச்சி அடுத்த பாகத்திலும் இருப்பதைப் போல் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படமும் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறதாம். இந்நிலையில், இப்படத்தின் முதல்பாகத்தை ரம்ஜான் தினத்தையொட்டி ஜுன் 23-ந் தேதி வெளியிடவுள்ளார்களாம்.

சிம்பு ரசிகர்களுக்கு உண்மையிலேயே இந்த செய்தி இரட்டை விருந்தாகத்தான் இருக்கும். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் டீசர்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யுவன் இசையமைப்பில் உருவாகியிருக்கும் பாடல்களை விரைவில் வெளியிடவுள்ளனர்.





Warning: Invalid argument supplied for foreach() in /home/cinemaparvai78/public_html/cinemapaarvai/wp-content/plugins/popliup/public/class-popliup-public.php on line 299