Search
Friday 15 December 2017
  • :
  • :

பிப்ரவரியில் வெளியாகும் தனுஷ் படம்

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’.

தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கவுதம் மேனன் தற்போது விக்ரமை வைத்து `துருவ நட்சத்திரம்’ படத்தை உருவாக்கி வருகிறார். தற்போது விக்ரம் `சாமி-2′ படத்தில் பிசியாகி இருப்பதால், தான் கிடப்பில் போட்ட `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் டிசம்பருக்குள் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பை முடிக்கவும் கவுதம் மேனன் திட்டமிட்டிருக்கிறாராம். அதனைத் தொடர்ந்து படத்தை வருகிற பிப்ரவரியில் வெளியிடவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து `துருவ நட்சத்திரம்’ ஏப்ரலில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

காதல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தர்புகி சிவா இசையமைத்துள்ளார். ராணா, சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Warning: Invalid argument supplied for foreach() in /home/cinemaparvai78/public_html/cinemapaarvai/wp-content/plugins/popliup/public/class-popliup-public.php on line 299