Search
Sunday 21 October 2018
  • :
  • :

இன்றைய பரபரப்புச் செய்திகள் 24/11/17 !

* தமிழில் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாணையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்.

* உடலுறுப்பு தானத்தில் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. உடலுறுப்பு தேவைப்படுபவர்கள் டிரான்ஸ்டான் வலை வரிசையில் பதிவு செய்துகொள்ளலாம் : தமிழக முதலமைச்சர் பழனிசாமி.

* அரக்கோணம் அருகே ராமாபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை.

* கைரேகை வழக்கில் ஜெயலலிதாவின் ஆதார் அட்டையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கு : ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது வைத்த கைரேகை தொடர்பான ஆவணங்களுடன் டிச.8ல் சிறை கண்காணிப்பாளர் ஆஜராக உத்தரவு.

* ஆர்கே.நகர் தொகுதியில் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் இருந்தால் உடனே அகற்ற வேண்டும், அகற்றவில்லை என்றால் விதிமீறல் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் : ஆணையாளர் கார்த்திகேயன்.

* மாணவர்களுக்கான புத்தக பை கொள்முதல் டெண்டருக்கு தடை கோரிய வழக்கு, தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

* வார இதழில் இந்து தீவிரவாதம் என கமல் எழுதியதற்கு எதிராக காவல்நிலையத்தில் அவர் மீது அளிக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

* மாணவி அனிதா மரணம் தொடர்பாக டிச.12-ல் ஆஜராக தலைமை செயலர், டிஜிபி, அரியலூர் ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது – தேசிய ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர் முருகன் திருச்சியில் பேட்டி.

* பிளஸ் டூ கல்வியோடு வேலைவாய்ப்பு பயிற்சியும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்தாண்டில் 3000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் கொண்டு வரப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்.

* மோடி துக்ளக் போல் செயல்படுகிறார். நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நடந்து வருகிறது – மம்தா பானர்ஜி.

* ஆர்கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு.

* இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் : சின்னம் தொடர்பாக தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் மனு.

* எம்ஜிஆர் நினைவுநாள் அன்று ஆர்கே. நகரில் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.ஆர்கே.நகர் வெற்றியை எம்ஜிஆர் , ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவோம் : மைத்ரேயன்.

* ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக கே.வேலுசாமி நியமனம்.தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களாக முருகேசன், சிப்பிரமணியன் நியமனம்.

* ஆர்கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிடுவேன் – டிடிவி.தினகரன்.

* ஒரு சார்பு செயல்பாடுகளால் தேர்தல் ஆணையம் நம்பிக்கை இழந்துவிட்டது : பாமக நிறுவனர் ராமதாஸ்.

* பெருநிறுவனங்களுக்கு தாரைவார்க்கவே ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடியிருப்புகள் அகற்றம் : இயக்குனர் கவுதமன்.

* மீண்டும் வாய்ப்பளித்தால் ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் -அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்துடனான சந்திப்புக்கு பின் மதுசூதனன் பேட்டி.

* ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது – தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் அறிவிப்பு.

* ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 30ம் தேதி கூடும் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

* ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.போலி வாக்காளர்களை நீக்கியதுபோல் போலி அரசையும் நீக்க வேண்டும் – துரைமுருகன்.

* குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்திற்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என ராகுல் காந்தி.

* தமிழகத்தில் பாஜக மறைமுகமாக ஆட்சி நடத்துகிறது – ஹர்திக் படேல்.

* ஆர்கே. நகர் தேர்தலில் டெபாசிட் இழப்பதில் திமுகவுக்கும் தினகரனுக்கும் தான் போட்டி ஏற்படலாம் – மைத்ரேயன்.

* இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கேசி.பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்.

* நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே ஹாடா வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை உயிரிழப்பு.

* பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் காவல்துறை கூடுதல் ஐஜி. அஷ்ரப் நூர் உயிரிழப்பு.

* திருப்பதியில் உள்ள இஸ்கான் தாமரை கோயிலில் நடிகை நமீதா – வீரேந்திர சவுத்ரி திருமணம் நடைபெற்றது சரத்குமார், ராதிகா உள்ளிட்ட திரைத்துறையினர் பங்கேற்பு.

* ஜெய்ப்பூரில் பத்மாவதி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தெலங்கானாவில் விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விழுந்து விபத்து.

* வேலூரில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு தலைமையாசிரியர் ஞானசேகரன் கைது.

* ஐதராபாத்தில் நவ.28 ஆம் தேதி சர்வதேச தொழிலதிபர்கள் மாநாடு: இவான்கா டிரம்ப் பங்கேற்கவுள்ளதால் பாதுகாப்பு அதிகரிப்பு.

* அறம் படத்தின் கதை தனக்கு சொந்தமானது என கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் மனோஜ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.

* அதிமுகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது : திருநாவுக்கரசர்.

* தற்கொலை செய்து கொண்ட சத்யபாமா பல்கலை. மாணவியின் பெற்றோர் நிர்வாகத்தின் மீது அளித்த புகாரை வாங்காமல் மாணவர்கள் மீது வழக்கு பதிவு.

* விருதுநகர் : சாஸ்தாகோவில் நீர்த்தேக்கம், பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நீர் திறக்க தமிழக முதலமைச்சர் ஆணை.

* நாச்சியார் திரைப்பட டீசர் விவகாரம் : இயக்குநர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீது மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு.

* திண்டுக்கல் : துப்புரவுப் பணியாளர்கள் 3பேர் வெட்டிப் படுகொலை.

* லக்னோ உயிரியல் பூங்காவில் 17 வயது ஆண் புலி ஆர்யான் உயிரிழப்பு : ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* டாஸ்மாக், மணல் குவாரிகளைப் போன்று சினிமாத்துறையையும் அரசே ஏன் ஏற்று நடத்தக்கூடாது ? – நடிகர் கருணாஸ்.

* வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியால் தமிழகத்தில் நாளை முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்