Search
Wednesday 23 January 2019
  • :
  • :

இன்றைய பரபரப்புச் செய்திகள் 17/01/18 !

* விரைவில் தமிழ் மொழிக்கு என்று ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு புதிய தமிழ் சொற்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கீழடியில் அடுத்தக்கட்ட அகழ்வாய்வு வரும் திங்கட்கிழமை தொடங்கப்படும் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

* அரசு வேலைகளில் ஆதரவற்றவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க மஹாராஷ்டிர அரசு ஒப்புதல்.

* ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள பேருந்துகள், டாக்சி போன்ற வாகனங்களில் கட்டாயம் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவு.

* ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட சசிகலா, பூங்குன்றன் அறைகளில் வருமான வரித்துறையினர் மீண்டும் ஆய்வு.

* ஓபிஎஸ் அணியினரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு : அரசு தரப்பு அவகாசம் கோரியதால் பிப்.13-க்கு ஒத்திவைப்பு.

* பிரதமர் நேரம் ஒதுக்கி தந்த பிறகு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடக்கும். டிடிவி.தினகரன் கட்சி ஆரம்பித்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – முதலமைச்சர் பழனிசாமி.

* புதிய கட்சி தொடங்குவதற்கான அவசியம் ஏற்படவில்லை. அதிமுக அம்மா பெயரில் செயல்பட முடியாத போது வேறு வழியில்லாமல் புதிய கட்சி தொடங்கப்படும்; புதிய கட்சி தொடங்கினால் அது அதிமுக, இரட்டை இலையை மீட்டெடுப்பதற்காகவே இருக்கும் – டிடிவி தினகரன்.

* சென்னை : போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஆய்வு.

* ஆய்வாளர் பெரியபாண்டியனை தாம் சுடவில்லை, துப்பாக்கி சத்தம் கேட்டதும் நண்பனுடன் தப்பி ஓடிவிட்டேன் – நாதுராம் வாக்குமூலம்.

* முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் 101வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணியில் மஹா புஷ்கரம் : ராமநதியில் தூய்மை பணி துவக்கம்.

* அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு பாஜக தான் காரணம். அதிமுக அம்மா என்ற பெயரை பயன்படுத்த அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுக உள்ளோம். வருகின்ற சட்டமன்ற, உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்திலேயே போட்டி – டிடிவி.தினகரன்.

* ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 14 விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் என அறிவிப்பு.

* தற்போதைய முதல்வர் ஈபிஎஸ் முதல்வர் பதவி ஏற்றவுடன் என்னிடம் வந்து நான் இன்னொரு ஓபிஎஸ் ஆக இருக்க மாட்டேன் என்றார். இப்போது தான் தெரிகிறது ஓபிஎஸ் விட மிகப்பெரிய துரோகி ஈபிஎஸ் – திவாகரன்.

* ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை ரத்து செய்த மத்திய அரசுக்கு திமுக கண்டனம் – திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

* அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் வெளிவருகிறது நமது அம்மா நாளிதழ்.

* டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழக மாணவர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத் பிரபு தற்கொலை : இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்எஸ் படித்து வந்தார்.

* நிலத்தடி நீர் மாசுபடுவதால் திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு.

* ஹஜ் புனித பயணத்துக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது கண்டனத்திற்குரியது – தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம்.

* பிப்.21 ல் தனது கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாக நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார் : அன்றைய தினமே ராமநாதபுரத்தில் இருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

* அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஆர்.கே.நகர் தோல்வி குறித்தும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்தும் ஆலோசனை.

* நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நிர்வாகிகளுடன் டிடிவி.தினகரன் ஆலோசனை.

* புதுக்கோட்டை வடமலாபூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது; 200க்கும் மேற்பட்ட காளைகள் 250க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

* திருச்சி : மணப்பாறை அருகே பூலாம்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

* புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியால் நியமிக்கப்பட்ட 3 எம்எல்ஏக்களுக்கு சம்பளம் தரக்கூடாது – கணக்கு & கருவூல இயக்குநருக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவு.

* டெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டத்தால் 21 ரயில்கள் தாமதம், 13 ரயில்கள் ரத்து.

* மீன்பிடி தொழிலுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டும் – தமாகா தலைவர் வாசன்.

* இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தனது மனைவியுடன் குஜராத் – சபர்மதியில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு சென்றார்.

* நான் நினைத்திருந்தால் அமைச்சர்கள் தற்போது பதவியில் இருந்திருக்க மாட்டார்கள். ஆளுங்கட்சிக்கு மத்தியில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி – டிடிவி.திவாகரன்.

* பத்மாவத் படத்துக்கு பல மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு : குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்க தயாரிப்பாளர் கோரிக்கை.

* ஸ்ரீவில்லிபுத்தூர் : கவிஞர் வைரமுத்து ஆண்டாள் கோயிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம்.

* ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து ஓராண்டு ஆனதை முன்னிட்டு சென்னை மெரினாவில் இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

* இராமேஸ்வரத்திலிருந்து சென்னை, மதுரை, திருச்சி உட்பட பல்வேறு விமான நிலையங்களுக்கு விமான சேவை. இராமேஸ்வரம் ஆன்மீக தலம் என்பதால் இங்கு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது – தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தகவல்.

* ஆண்டாள் விவகாரம் : வைரமுத்து வருத்தம் தெரிவிக்க தேவையில்லை – முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன்.

* தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே தளவாய்புரத்தில் பாலத்தில் மோதி வேன் கவிழ்ந்ததில், வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு.

* கடலூரில் ஈபிஎஸ் அணியின் நகர செயலாளர் குமரன் தலைமையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை ஓபிஎஸ் அணியினர் புறக்கணித்தனர்.

* அதிமுக சார்பில் வழங்கப்பட்ட இன்னோவா காரை திருப்பி கொடுத்தார் நாஞ்சில் சம்பத்.

* ஹஜ் புனித யாத்திரைக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது – ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜபார்.

* காவிரி விவகாரம் : தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 27ம் தேதி ரயில் மறியல் போராட்டம் – அனைத்து விவசாய சங்கம் அறிவிப்பு.

* ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் நடிகை அமலா பாலுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமின்.

* ஓசூர் அடுத்த பொம்மதாத்தனூரில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி.

* ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணி நவம்பர் 30ல் இருந்து டிசம்பர் 31வரை நடந்தது : இந்திய கடலோர காவல்படை இயக்குநர்.

* இந்தியா-தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

* தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். உள் மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் – வானிலை ஆய்வு மையம்.