Search
Monday 23 July 2018
  • :
  • :

இன்றைய பரபரப்புச் செய்திகள்

* சசிகலாவின் கணவர் நடராஜன் தற்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார் : குளோபல் மருத்துவமனை.

* காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 13,785 கன அடியில் இருந்து 23,871 கன அடியாக அதிகரித்துள்ளது.

* உத்திரபிரதேச மாநிலத்தில் சரயூ நதியில் பேராட்சி அருகே பேடா என்ற இடத்தில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

* ஜம்மு – காஷ்மீர் நவ்ஷேரா பகுதியில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி.

* தமிழகம் முழுவதும் காய்ச்சல் வரக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்.

* ஆரணி அருகே 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார். தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

* டெங்கு விழிப்புணர்வை வலியுறுத்தி புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி 5 கி.மீ நடைபயணம்.

* காஞ்சிபுரம் : மறைமலைநகர் பேரமனூர் பகுதியில் தமிழ் என்ற ரவுடியை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர்.

* சென்னை ராயப்பேட்டையில் கொசு இல்லா இல்லம் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

* தேவக்கோட்டையில் வைரஸ் காய்ச்சலால் முத்துமாரி என்ற பெண் உயிரிழப்பு.

* திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் கைது.

* கடலூர் பெண்ணாடம் அருகே பூவனூரில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் அரசுப்பேருந்தை சிறைப்பிடித்தனர்.

* நாகை ஆரியநாட்டுதெரு கிராமத்தில் மூளைக்காய்ச்சலால் கபிஷ் என்ற 5 வயது சிறுவன் உயிரிழப்பு.

* தருமபுரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பல்துறை பணி விளக்க கண்காட்சியை மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை திறந்து வைத்தார்.

* தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு இன்று இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் : பொதுமக்கள் அதிர்ச்சி.

* கெயில் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற மத்திய – மாநில அரசுகள் முற்பட்டால், 7 மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து போராடுவோம் – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

* நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி தமிழக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளேன். தமிழகத்தில் நிலவும் டெங்கு, சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆளுநரிடம் புகார் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறினார் : தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

* உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. அழைப்பு விடுக்கப்படாததால் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை : தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

* சென்னை தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா இல்லத்தில் பரோலில் வந்துள்ள சசிகலாவுடன் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் மற்றும் சசிகலாவின் வழக்கறிஞர் சந்தித்துள்ளனர்.

* சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் கணவர் நடராஜனை சந்தித்து சசிகலா நலம் விசாரித்தார்.

* சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற சிறுவன், கல்லூரி மாணவி பலி.

* அரசியல் சூழ்நிலைக்காக மட்டுமே சசிகலாவிற்கு நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது. பரோலில் சசிகலா வந்துள்ளது தனிப்பட்ட காரணத்திற்காகவே, அரசியல் காரணங்களுக்காக அல்ல – ஆளுநரை சந்தித்த பின் மைத்ரேயன் எம்பி.

* பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார் நடிகர் ஜெய்.

* எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி மிகவும் மோசமாக உள்ளது. ஈபிஎஸ், ஓபிஎஸ் நன்றாக நடிக்கிறார்கள் : தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

* சசிகலா கணவர் நடராசனின் உடல்நிலை அறுவை சிகிச்சைக்கு பிறகு முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

* டெங்குவை தடுக்க புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது – புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

* 2 நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி துவர்கா வந்தடைந்தார்.

* நெல்லையில் கைதிகள் இருவர் தப்பிச்சென்ற வழக்கில் 3 போலீசார் பணியிடை நீக்கம் : பாளையங்கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் பாபுனி ஜட்டுஸ், எஸ்ஐ.ஆறுமுக கனி, தலைமை காவலர் முருகன் ஆகியோர் நீக்கம் செய்து நெல்லை மாநகர காவல் ஆணையர் கபில்குமார் சராட்கர் உத்தரவு.

* தமிழகத்தில் 131 இடங்களில் எலிசா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 747 சிறப்பு மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்.

* கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்ட ராஜா என்ற நோயாளி வலி தாங்க முடியாமல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

* சென்னை தி.நகரில் சசிகலாவைக் காண ஆதரவு எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், உதயகுமார் வருகை தந்துள்ளனர்.

* இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விலகல்.

* இந்த தலைமுறையில் அரசியலுக்கு யார் வந்தால் சரியாக இருக்குமோ அவருக்கு ஆதரவு தரவேண்டும் – நடிகை கெளதமி.

* சென்னை காவல் துறையினருக்கான வங்கி சம்பளக் கணக்கு, ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளது – சென்னை பெருநகர
காவல் துறையின் நிர்வாக அதிகாரி அறிக்கை