Search
Sunday 21 October 2018
  • :
  • :

இன்றைய பரபரப்பு செய்திகள் 04/12/17 !

* தென்கிழக்கு ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம்.

* ஒக்கி புயலால் காணாமல் போன 2000 மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் முறையீடு.

* முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் 60 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது.

* காணாமல் போன மீனவர்களை கணக்கெடுக்கும் பணியில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு மீனவ கிராமத்திற்கும் சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது – அமைச்சர் உதயகுமார்.

* புயல் குறித்து மத்திய – மாநில அரசுகள் முன்னறிவிப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் மீனவர்களுக்கு அதிக பாதிப்பு – டிடிவி.தினகரன்.

* புல்லட் ரெயிலை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் செல்லட்டும் : குஜராத்தில் பிரதமர் மோடி பிரசாரம்.

* டிடிவி தினகரன் அணி அரசியல் கட்சி அல்ல, அவர் சுயேட்சை தான், அந்த அடிப்படையில் தான் சின்னம் ஒதுக்கப்படும் : தேர்தல் ஆணையம்.

* சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு இறுதியானது அல்ல – டிடிவி.தினகரன்.

* தொப்பி சின்னத்தை டிடிவி தினகரன் பயன்படுத்துவதால் தேர்தல் ஆணையத்திற்கு என்ன இழப்பு? – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி.

* தூத்துக்குடி : பேரிடர் காலங்களில் மக்களை காப்பதற்கான எந்த வசதியும் தமிழகத்தில் இல்லை : சீமான்.

* குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் அறிவிக்கும் பிரதமர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டு கொள்ளாதது ஏன் ? – சீமான் கேள்வி.

* அதிமுக விவகாரத்தில் எந்த அணியை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறது என டெல்லி உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி.

* ஆர் கே நகர் தேர்தல் மட்டுமல்ல, அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவோம் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

* முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

* 40 விசைப்படகுகளில் சென்ற 600 தமிழக மீனவர்கள் குஜராத்தில் கரை ஒதுங்கியுள்ளோம். மேலும் 20 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் இன்னும் கரை திரும்ப வேண்டியுள்ளது – கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதி மீனவர் பிபின் குஜராத்தில் பேட்டி.

* டிடிவி. தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

* கேரளாவில் கடலில் மீன்பிடிக்கச் சென்று உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு : இதுவரை 479 கேரள மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

* ஆர் கே நகரில் உள்ள 900 தெருக்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக மனு.

* ஆர் கே நகரில் திமுக வெற்றி பெறுவதை எவராலும் தடுக்க முடியாது – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

* தமிழகத்தில் ரேக்ளா ரேஸ்க்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு – வரும் 8-ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.

* காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.

* தருமபுரி : சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு.

* செம்மொழி மாநாட்டுக்கு அலங்கார வளைவுகளை அமைத்தவர்கள் அதிமுக அரசை குறைகூறுவதா ? எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தமிழக முதலமைச்சர் கேள்வி.

* ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணம் என விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக கூறியதை அடுத்து மனு தள்ளுபடி.

* ஆர் கே நகர் தேர்தலில் நான் 100% வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அரசியல்வாதியாக தேர்தலில் நிற்கவில்லை. மக்கள் பிரதிநிதியாகவே நிற்கிறேன் – நடிகர் விஷால்.

* ஆர் கே நகர் தேர்தலில் விஷாலால் டெபாசிட் கூட பெற முடியாது – நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம்.

* ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைகளுக்காக பெரியார் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி.

* கனமழை எச்சரிக்கையை அடுத்து வேலூர் மாவட்டம் அரக்கோணத்திலிருந்து 40 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு கடலூருக்கு விரைந்தனர்.

* சென்னை : நெற்குன்றம் பகுதியில் கழிவுநீர்த் தொட்டியில் தவறி விழுந்த லட்சன் குமார் என்ற சிறுவன் உயிரிழப்பு.

* கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் – தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

* காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்பதால் அந்தமான் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை.

* நாளை வரை தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் – வானிலை ஆய்வு மையம்.