Search
Saturday 20 October 2018
  • :
  • :

இன்றைய பரபரப்புச் செய்திகள் 03/01/18 !

* ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு : அவனியாபுரம் – ஜனவரி 14 , பாலமேடு – ஜனவரி 15 , அலங்காநல்லூர் – ஜனவரி 16.

* முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

* குமரியில் புயலால் உயிரிழந்த அனைவருக்கும் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.

* ரத்த தானம் அளிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு.

* ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜனவரி 12க்குள் சிகிச்சை குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் உத்தரவு.

* அதிமுகவுக்கு தனியாக தொலைக்காட்சி, செய்தித்தாள் தொடங்க நடவடிக்கை – தமிழக முதலமைச்சர்.

* அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத்திட்டத்தை ரத்து செய்யும் நோக்கம் இல்லை – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.

* போயஸ் தோட்ட இல்லத்தின் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கிவிட்டது : ஆட்சியர் தகவல்.

* சட்டப்பேரவையில் முழுமையாக பேச சபாநாயகர் எனக்கு வாய்ப்பளிப்பார் என நம்புகிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது தான் ஸ்லீப்பர் செல்கள் செயல்படுவார்கள் – எம்எல்ஏ டிடிவி.தினகரன்.

* கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்கக்கோரி, பத்மநாபபுரம் எம்எல்ஏ மானோ தங்கராஜ் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம்.

* சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் அவரது மகன் முக.அழகிரி சந்திப்பு.

* திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். ரஜினிகாந்தை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன், விரைவில் சந்திப்பேன் – முக.அழகிரி.

* கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்துக்கு நாளை தண்டனை அறிவிப்பு – ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

* டிசம்பர் 5 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 20 நிமிடங்களில் ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பாமிங் பணி நிறைவடைந்தது : ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகிய பின் மருத்துவர் சுதா சேஷையன் பேட்டி.

* மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை காலை 8 முதல் மாலை 3 மணி வரை நடத்த அனுமதி.

* அலங்காநல்லூரில் ஒரு பேட்ச்சுக்கு 75 வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி – மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ்.

* கோவா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் ஏற்பட்ட விபத்தால், விமான நிலையம் தற்காலிகமாக மூடல்.

* தமிழக, கேரள அமைச்சர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது, இந்தி பேசாதவர்களும் இந்தியர்களே – சசிதரூர்.

* இமாச்சல பிரதேச மாநிலம் ரூ.1,351 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்.

* தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 4,904 காவலர்கள் அதிகமாக பணியில் உள்ளனர் – மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

* தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,21,168, பணியில் உள்ளவர்கள் 1,26,072 – மத்திய உள்துறை அமைச்சகம்.

* தேசிய மருத்துவ ஆணையத்தில் தமிழக அரசின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் அழுத்தம் கொடுக்கப்படும். மத்திய அரசின் தற்போதைய தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை தமிழக அரசு வரவேற்கவில்லை : சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்.

* அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் : சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

* அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க இதுவரை 104 எம்எல்ஏக்கள் வருகை தந்துள்ளனர்.

* அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்.

* 12 பேரை தவிர வேறு யாரும் அதிமுக சார்பில் ஊடகங்களில் பேச அனுமதியில்லை – ஓபிஎஸ், ஈபிஎஸ்.

* அதிமுக செய்தித்தொடர்பாளர்களாக பொன்னையன், கோகுல இந்திரா, வளர்மதி, வைகைச்செல்வன் நியமனம்.

* டிடிவி.தினகரன் கன்னிப்பேச்சு பேசும்போது அதிமுக எம்எல்ஏக்கள் இடைமறித்து பேசக்கூடாது – அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

* மக்கள் பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டும் – அதிமுக எம்எல்ஏ கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி அறிவுரை.

* மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு மகாராஷ்டிரா வன்முறை குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் கோரிக்கை.

* லைகா நிறுவனத்தின் இந்தியக் கிளைத் தலைவர் ரஜினி கட்சியில் சேர முடிவு.

* கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கக்கோரி ஆற்றில் இறங்கி அப்பகுதி மக்கள் போராட்டம்.

* உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடன் இணைந்து போட்டியிட அதிமுக முன்வந்தால் ஏற்க தயார் – டிடிவி.தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் பேட்டி.

* இந்தியாவில் மட்டுமின்றி நேபாள், மாலத்தீவு, பிகி தீவுகளிலும் இந்தி பேசப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சர்.

* சரணடையும் மாவோயிஸ்ட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் இல்லை : மத்திய அரசு தகவல்.

* ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ஆன்மிக அரசியலைப் பற்றி அவர்தான் விளக்க வேண்டும் – பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

* சட்டப் பேரவைக்கு தினகரன் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

* +2 பொதுத்தேர்வை எழுதும் தனித்தேர்வர்கள், தட்கல் திட்டத்தின் கீழ் நாளை முதல் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் – தேர்வுத்துறை அறிவிப்பு.

* புதுச்சேரியில் இலவச வேட்டி, சேலை வழங்குவதில் முறைகேடு என புகார் : கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு.

* திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார்.

* ஆய்வு செய்வதால் ஆளுநர் ஆட்சி என்று சொல்லக்கூடாது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் ஆளுநர் ஆய்வு செய்வதில்லை – தமிழிசை.

* புதுடெல்லி : ரேஷன் கடைகள் உள்ளிட்ட பொது விநியோக திட்டம் மூலம் பால் விநியோகம் செய்ய பரிசிலிக்க வேண்டும் என்று தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

* ஆய்வு என்ற பெயரில் மக்களை திசை திருப்பி, முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட முயற்சிக்கிறார் தமிழக ஆளுநர் – இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்.

* ஆர்கே. நகர் தேர்தல் விதிமுறைப்படி இல்லாமல் நிதிமுறைப்படி நடந்துள்ளது; விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை – தமிழிசை.

* சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜிவ் சக்தேர் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம். ஜன.16ம் தேதிக்குள் டெல்லியில் பொறுப்பேற்பார் என அறிவிப்பாணை வெளியிட்டது மத்திய சட்டத்துறை அமைச்சகம்.

* ஊபர் மற்றும் ஓலா ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து 2 நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் கண்டித்து இன்று வேலைநிறுத்தப் போராட்டம்.

* புதுக்கோட்டை : ஆம்பூர்பட்டி நால்ரோடு பகுதியில் 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் பழனியப்பன், பரமசிவன் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

* எச்1பி விசா வழங்குவதில் அமெரிக்கா கெடுபிடி : IT துறையில் 6 லட்சம் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்.

* திருச்சியில் ஐல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் பெல்சனுக்கு மீண்டும் பணி வழங்க காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு.

* கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி கிடையாது : கொடைக்கானல் வனத்துறை அறிவிப்பு.

* காஷ்மீரில் மூச்சு திணறலால் இறந்த எட்டயபுரம் ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் தகனம்.

* அதிபர் டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து 1,621 கோடி நிதி உதவி பாகிஸ்தானுக்கு நிறுத்தம் : அமெரிக்கா அதிரடி.

* வட கொரியாவை விட அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை.

* நடிகர் ரஜினி மன்றத்தில் 3 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* முதுமலை யானைகள் நலவாழ்வு முகாம் நடத்த அரசாணை எதுவும் வெளியாகாததால், முதுமலை யானைகளுக்கும் தமிழக அரசு முகாம் நடத்த வேண்டும் – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை.

* பெரு நாட்டின் தலைநகரான லீமாவில், மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்து விபத்து 48 பேர் உயிரிழப்பு.

* போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகையை 11ம் தேதிக்குள் வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு.

* கோவை ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற போலீஸார் நெருக்கடி தருவதாக ஆட்டோ டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

* தாஜ்மகாலை காண ஒரு நாள் 40 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதி.