Search
Monday 22 October 2018
  • :
  • :

அதிர வைத்த இசைப்புயல்!!

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த இசையமைப்பாளராக “ஆஸ்கார் நாயகன்” ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார்.

“காற்று வெளியிடை” படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளியான “மாம்” படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறந்த பாடகிக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “காற்று வெளியிடை” படத்தில் “வான் வருவான்” பாடலை பாடிய சாஷா திரிபாதி தட்டிச் சென்றிருக்கிறார்.

ஆக மொத்தம் இந்த வருடம் மட்டுமே 3 விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானை அலங்கரிக்கின்றன.