Search
Saturday 16 December 2017
  • :
  • :

ஜனவரியில் மக்களை சந்திக்கும் அனுஷ்கா!

பாகுபலி 2 படத்திற்குப் பிறகு அனுஷ்கா நடித்து வரும் திரைப்படம் “பாகமதி”. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆதி பினிசெட்டி மற்றும் ஆஷா சரத் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

மிரட்டும் க்ரைம் த்ரில்லர் கதையை எழுதி இயக்கியிருப்பவர் ஜி.அசோக். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வி.வம்சி கிருஷ்ண ரெட்டி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

எஸ்.தமன் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக ஆர்.மதி பணியாற்றியிருக்கிறார். இவர்களோடு மேலும் பல முன்னணி தொழிற்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றும் இந்த படத்தின் இறுதிகட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் சூழலில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகமதி படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.





Warning: Invalid argument supplied for foreach() in /home/cinemaparvai78/public_html/cinemapaarvai/wp-content/plugins/popliup/public/class-popliup-public.php on line 299