Search
Wednesday 20 March 2019
  • :
  • :
Latest Update

மாரி 2 படத்தில் தனுஷுடன் கைகோர்த்த அகில இந்திய பிரபலம்!!

நடிகர் தனுஷ் தற்போது “மாரி 2” படத்தில் பயங்கர பிஸியாக நடித்து வருகிறார். பாலாஜி மோகன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா – தனுஷ் கூட்டணி இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெரும் ஒரு பாடலுக்கு நடிகர் பிரபு தேவா நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இந்தத் தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தனுஷ், “அவரது நடனைத்தை சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் சேர்ந்து பணியாற்ற கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபுதேவா தற்போது “லக்ஷ்மி”, “பொன்.மாணிக்கவேல்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.