Search
Sunday 24 September 2017
  • :
  • :

கருப்பனை வாங்கிய அலெக்ஸாண்டர்

விஜய் சேதுபதி நடிப்பில் ‘ரேனிகுண்டா’ பட இயக்குநர் ஆர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருப்பன்’.

இப்படத்தில் ‘பலே வெள்ளையத்தேவா’, ‘பிருந்தாவனம்’ படங்களின் நாயகி தன்யா, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் பாபி சிம்ஹா, கிஷோர் போன்ற முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்.

திண்டுக்கல் மற்றும் தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

விக்ரம் வேதா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கருப்பன் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ‘பிக்ஸர் பாக்ஸ்’ அலெக்ஸாண்டர் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.